நாஞ்சில் நாடனுக்கு சூடிய பூ சூடற்க என்னும் நூலுக்காக சாகித்ய அகாதமி விருது கிடைத்திருக்கிறது. தகுதியும் அரசாங்க விருதும் அபூர்வமாகச் சந்தித்துக் கொண்டுவிட்டதில் எனக்குக் கட்டறு மகிழ்ச்சி ஏற்பட்டது. செய்தியைக் கண்டவுடன் அவருடைய அலைபேசிக்கு அடித்தேன். எடுத்தார்.
சார். வாழ்த்துகள் !
நன்றி. எப்படி இருக்கீங்க ?
நலம். இணையத்தில் செய்தியைப் பார்த்தேன்.
இணையத்துல போட்டுட்டாங்களா ?
ஆமாம் சார்.
என்ன இப்பெல்லாம் கோயமுத்தூர் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டேங்கறீங்க ?
எக்கச் சக்கமான வேலை சார். இல்லாட்டி வராமயா...
ஓ...
எங்களுக்கே கிடைச்ச மாதிரி ஒரு சந்தோஷமுங்கொ...
பின்னே உங்களுக்குத் தானே கிடைச்சிருக்கு !
நாஞ்சில் நாடனை வாக்குப் பொறுக்கிகள் சிறுகதைத் தொகுப்பு மூலமாகத்தான் அறிந்தேன். அவருடைய மிதவை, சதுரங்கக் குதிரை முதலான புதினங்கள் அதைப் படித்த காலத்திலேயே என்னைப் பெரிதும் ஈர்த்தவை. புனைவுகளை விடவும் அவர்தம் கட்டுரைகளில் புழங்கும் அருமையான தமிழ் வாசகனை மயக்கிவிடக் கூடிய வல்லமையுடையது. அவரோடு மிக நெருக்கமாக உணரவைப்பது. அவற்றுள் ஆங்காங்கே அவர் தூவிச் செல்லும் பழந்தமிழ்த் தொடர்கள் எதிர்பாராத விருந்து. பிழைப்பதற்காகப் பிறவூர் சென்ற மனது பிழிபட்டு வதைபடும் தருணங்களை அவருடைய கதைகள் உரக்கப் பேசின. அவரோடு உரையாடலில் ஈடுபட்டு அவருடைய மின்னல் தெறிப்பான வசனங்களைக் காதுகுளிரக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். வாழ்க்கை பூரா ஒரு வாத்தியார் பாடமெடுத்துச் சம்பாதிக்கிற தொகையைப் போல பத்து மடங்கு தொகைய ஒரு படத்தில நடிக்கிறவன் அள்ளிக்கிட்டுப் போறானே... அப்படி என்னத்தை இவன் இந்தச் சமூகத்துக்கு நல்லது பண்றான் ? என்பார். நாஞ்சில் நாடன் உடன்வரும்படி ஒரு பயணம் அமைந்தால் அதைப்போல் இனிய அனுபவம் இன்னொன்று இருக்க முடியாது என்பது என் இலக்கிய நண்பர்களின் கருத்து.
எல்லா நவீன இலக்கியப் படைப்பாளிகள் சார்பாகவும் இவ்விருதைப் பெற்றுக்கொள்வதாக அவர் கூறியிருக்கிறார். பின்னே உங்களுக்குத்தானே கிடைச்சிருக்கு” என்று அவர் சொன்னதற்கு அதுதான் அர்த்தம்.
என்னுடைய காமக் கடும்புனல் தொகுப்பிற்கு அவர்தாம் முன்னுரை எழுதியிருந்தார். அதற்காகவும் என் நன்றிகள் !
கவிஞருக்கு,
ReplyDeleteநாஞ்சிலாருக்கு விருது கிடைத்திருப்பதன் மூலம் அவ்விருது பெருமைப்படும்..
கற்றாரை, கற்றாரே காமுறுவர். - இதுவே தங்களின் பதிவு உணர்த்திய செய்தி.
சாகித்ய அகாதமி விருது பெற்ற நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றியும் அன்பு நிறைய வாழ்த்துகளும்
ReplyDeleteஅப்பொ, வந்திட்டீங்களா? இதற்காகவே நாஞ்சில் நாடனுக்கு விருது கொடுத்தது தகும் என்கலாம். அவர் நாவல்களுக்கும் கொடுக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு. அடுத்த தடவை கொடுப்பார்களாயிருக்கும்.
ReplyDeleteநாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள். 11-12-2010 அன்று நாவல் இலக்கியம் பற்றிய அவரின் நகைச்சுவை கலந்த கட்டுரை வாசிப்பை தில்லி தமிழ்ச் சங்கத்தில் கேட்டு மகிழ்ந்தது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteகிட்டத்தட்ட ரெண்டு மாசம் கழிச்சு வந்திருக்கீங்க. நாஞ்சில் நாடன் தான் கூட்டி வந்திருக்கார் போலும். அருமையான எழுத்தாளர். நீங்க சொன்னது போல் அதிசயமா ஒரு சரியான நபருக்கு கிடைச்சிருக்கு
ReplyDeleteஅட!!போட்டோவில் கூட நீங்க ரெண்டு பேரும் தான் இருக்கீங்க போல!!.. படத்தில் இருக்க இடைவெளி மாதிரி உங்கள் ரெண்டு பேருக்கும் கூட இடைவெளி குறைவு தான். இத்தகைய பெரிய விருதுகள் உங்களையும் அடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteகொல்லான், மாதேவி, வேல்கண்ணன், கலாநேசன் - நன்றி !
ReplyDeleteராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! நீங்கள் உத்தவிட்ட பிறகும் உள்ளே வராமல் இருக்க முடியுமா ? - ஆம்... அவருடைய நாவலொன்றுக்குக் கொடுத்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் தான்.
மோகன் குமார் ! அதற்கு நான் இன்னும் முப்பது புத்தகங்கள் எழுத வேண்டும். முப்பது ஆண்டுகள் கழிய வேண்டும்.
வாழ்த்துக்கள்..பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete