Thursday, October 28, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே

  • ஒபாமா இந்தியா வரப்போகிறார். அவரை நேரில் சந்திக்க வாய்த்தால் என்ன கேட்பீர்கள் ?

டாலர் மதிப்பு சரியாமலிருக்க எதையாவது செய்யுங்களேன். 


  • அம்மாவிற்குக் கூடிய கூட்டங்கள் அப்படியே வாக்குகளாக மாறுமா ?

வாக்குகளாக மாறியவுடன் அம்மாவின் போக்குகளும் மாறி விடாதா ?

 

  • கோவில் பூசாரிகள் வேலை நிறுத்தம் செய்யலாமா ?

ஐயகோ... வேலை நிறுத்தத்தால் கடவுள் மேனி வியர்த்து வடியுமே !


  • பருத்தி நூல் விலை நூற்றுநாற்பது வருடத்தில் இல்லாத விலையுச்சத்தில் இருக்கிறதாமே ?

ஆனால், அதே பருத்தி விவசாயி 140 வருடங்களாக அதே வறுமையிலேயே இருக்கிறானே !

  • ஒரே எண்ணை எந்த நிறுவனத்திற்கும் மாற்றிக்கொள்ளும் கைப்பேசி வசதியைப் பயன்படுத்துவீர்களா ?

எண்களில் எல்லாம் இருக்கிறது என்ற மூடநம்பிக்கைக்கு இது கட்டியம் கூறுவதைப் போலிருக்கிறது.

 

  • நீங்கள் எப்படி எந்திரன் திரைப்படத்தைப் பார்க்கலாம் ?

ஏனுங்க... அவனவன் ஆகாத பொண்டாட்டி கூட ஐம்பது வருசம் குடித்தனம் நடத்தலயா ?

  • வ குவார்ட்டர் கட்டிங் என்றால் என்ன ?

நான் வைக்கிறதுதான் தலைப்பு என்று அர்த்தம்

  • பங்குச் சந்தையின் உச்சம் எதைக் காட்டுகிறது ?

மலைமுகட்டின் உச்சத்தில் மறுபுறம் உள்ளது அதலபாதாளமே.

  • இந்தோனேசியாவில் அடிக்கடி இயற்கைப் பேரழிவுகள் நிகழ்வது ஏன் ?

தீபகற்ப  மற்றும் தீவு நாடுகள் இயற்கையோடு உரசி உரசி இல்லாமலாகிவிடும் அபாயத்தில் உள்ளன.

  • கவாஸ்கர் கொச்சி அணி உரிமையாளர் குழுவில் இடம்பெறுகிறாராமே ?

அண்ணாத்தை மைதானத்திற்கு வெளியே ஆட நிறைய விளையாட்டுகளைத்  தெரிந்துவைத்திருக்கிறார்.

  • விஜயகாந்த் திருப்பூரைத்  தான் வளர்ந்த ஊர் என்றாராமே ?

இதற்காகச் சென்னைத் தமிழன் கோபித்துக்கொள்ளவா போகிறான் ?

  

  • புதிய புதிய தங்க நகைக் கடைகள் நிறைய முளைக்கின்றனவே, மக்களிடம் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறதா ?

ஆசை ஆசை அதிகரித்திருக்கிறது.

6 comments:

  1. உலகளாவிய பார்வையில் கேள்வி பதில். இது வரை வந்த கேள்வி பதில்களில் இதுவே சிறந்தது என்பது என் கருத்து.

    ReplyDelete
  2. கேள்விகளும், பதிலும் நன்று.
    http://ippadikkuelango.blogspot.com/

    ReplyDelete
  3. இது தவறான பதில்
    //ஒரே எண்ணை எந்த நிறுவனத்திற்கும் மாற்றிக்கொள்ளும் கைப்பேசி வசதியைப் பயன்படுத்துவீர்களா ?
    எண்களில் எல்லாம் இருக்கிறது என்ற மூடநம்பிக்கைக்கு இது கட்டியம் கூறுவதைப் போலிருக்கிறது
    //ஏர்டெல்லில் இப்போது உபயோகப்படுத்தும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் தெரிந்த எண்ணை இதை விட கட்டணம் குறைந்த bsnl -லில் மாற்றிக்கொள்ளலாம் என்பது வசதி தானே

    ReplyDelete
  4. வணக்கம். உங்கள் வலைப்பூவை முதல் முறையாக படிக்கிறேன். கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உங்கள் தமிழ் என்னை மயக்கியது. எழுத்து நடை இன்னும் படிக்க தூண்டியது. நிறைய எழுதுங்கள். படிக்க காத்து இருக்கின்றேன்.

    நேரம் அமையும் பொழுது உங்கள் எழுத்தை பொறுமையாக, நிதானமாக ரசித்து படிக்க வேண்டும்.

    திரு. ராஜசுந்தரராஜன் அவர்களின் பின்னூட்டமும் மயக்குகிறது. உங்களுக்கும் அவருக்கும் உள்ள நட்பை தாண்டிய உறவை புரிந்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமான நட்பு (உறவு)...வளரட்டும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கொல்லான், இளங்கோ ! நன்றி.

    பந்து ! நாம் என்ன மதிப்பெண் வாங்கவா பதில் எழுதுகிறோம் ? ஒரு நிகழ்வுக்கோவையின் இன்னொரு புறத்தைத் தொட்டுக் காட்ட முடியுமா என்பதுதான் பதில்களின் நோக்கமே. அதனால் உணர்ச்சிவசப் படாதீர்கள்.

    விஜய்வீரப்பன் சுவாமிநாதன் ! நற்றமிழ்த் தேனீயே வருக ! தமிழால் இணைந்தோம் இங்கே !

    ReplyDelete
  6. நன்றி கவிஞரே!! இணைந்து இருப்போம் தமிழ் உள்ள வரை....

    ReplyDelete