Wednesday, October 6, 2010

வாழ்க தமிழர் !


எந்திரன் பார்த்தேன். பார்க்கத் தேவையில்லை என்று முடிவு செய்திருந்த படம்தான். ஆனால் பங்குச் சந்தையில் சில வாங்குதல் மற்றும் விற்றல் நிலைகளை மறுநாள் நிலவரத்தை யூகித்து நான் எடுத்துவைத்திருந்தேன். அது மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது. அந்தப் பதற்றங்களிலிருந்து நான் எங்காவது ஓடிப் போக வேண்டியிருந்தது. இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் என் வீட்டருகில் உள்ள திரையரங்கை அங்கே என்ன படம் நடக்கிறது என்கிற அறிதலில்லாமலே நான் அடைவதுண்டு. அப்படி அடைந்த இடத்தில் எந்திரம் கட்டியிருந்தார்கள். போச்சாது போ என்று போனேன். பார்த்தேன். வந்துவிட்டேன். இதற்கு மெனக்கெட்டதற்குப் பதிலாக வீட்டில் பாப்பா எப்பொழுதும் பார்த்துக்கொண்டிருக்கும் JETIX பார்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாராட்டுரையாக, சுஜாதாவின் மூளையில் உறைந்திருந்த மின்னல்களின் கடைசித் துளியைப் பருகினேன் எனலாம்.

மேலும், படம் ஓடிக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருக்க இடையில் அதிகார தோரணை மிகுந்த சிலர் ஒவ்வொரு மண்டையின் மீதும் கையொளி விளக்கைப் பாய்ச்சித் தலைகளைத் திரும்பத் திரும்ப எண்ணினார்கள். அரிசிச் சோற்றுக்கும் பருப்புக் குழம்புக்கும் சிந்தித்துச் சிந்தித்தே தம் மூளைகளைத் தொலைத்துவிட்ட அந்த அப்பாவி ஜனங்களோடு நானும் ஒரு மூடனாய் என் தலையை எண்ணக் கொடுத்தேன். ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு காட்சியிலும் இவ்வாறு மீறப்பட்ட அவமதிக்கப்பட்ட தருணங்கள் எத்தனை எத்தனையோ !

சும்மாவா சொன்னார் நாமக்கல் கவிஞர் ‘தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவர்க்கோர் குணமுண்டுஎன்று !

5 comments:

  1. கவிஞரே,
    தெரிந்தே உங்களுக்கு 'எந்திரம்' மந்தரித்து வைத்து விட்டார்கள்.
    தாங்கள் சொன்னது போலவே, சுஜாதாவின் சில சிந்தனைகளைத் தவிர, சொல்லிக்கொள்ளும் படி ஏதுமில்லை.

    ReplyDelete
  2. இலவசச் சீட்டுக் கிட்டியதென்று முதல்நாளே போய்ப் பார்த்தேன். இடைவேளைக்கு வெளியேறுகையில் ஒரு நல்ல உணர்வுதான் இருந்தது. அதற்குப் பிறகுதான் சோதனை. ஆனால் எங்கள் பாப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  3. கொல்லான் ! உண்மையான மூல ஊற்று திரையுலகில் எவ்வாறு இருட்டடிக்கப்படுகிறது பாருங்கள் !

    அண்ணாச்சி ! பாப்பாவுக்குப் பிடித்திருந்தால் போதும்.

    ReplyDelete
  4. //சும்மாவா சொன்னார் நாமக்கல் கவிஞர் ‘தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று //

    உண்மைதான். மிக நன்றாக அவதானித்தே சொல்லி இருக்கிறார்:)

    ReplyDelete
  5. ‘தமிழர் என்றோர் இனமுண்டு – தனியே அவர்க்கோர் குணமுண்டு’ - :)

    ReplyDelete