அன்று
மதுக்கோப்பையைப் போல்
மாறி நின்றது
முருங்கைப் பூ
அது
காம்பிலேயே கைவிடப்பட்ட
பறித்துச் சூடப்படாத
மாற்று மல்லிகை
தேன்சிட்டுக்கு உண்டே
சின்னஞ்சிறு அலகுக் குழல் !
அரிசி மணி அளவேயான அதன் வயிற்றுக்கும்
பசியென்ற
பழைய நியதி உண்டே !
மலர்க் கோப்பைக்குள்
மூக்கால் மூழ்கி
மதுத்துளியைப் பருகியது
மலர் கருவுற்று
பிஞ்சொன்றை ஈன்றது
பிஞ்சுக்கும் சிட்டுக்கும்
இருக்கவில்லை
பிறகெந்த உறவும் !
நல்ல கவிதை
ReplyDeletenice one
ReplyDeleteமுன்னுறவே தீராத போது
ReplyDeleteபிறகேன்
பிற உறவு?
கவிதையில் உள்ளதோர் ஒருங்கு (integrity) இன்னதென்று தெளிந்து பாராட்டுகிறேன்.
ReplyDeleteதாதுச்சேர்க்கை மலர்களுக்கு இடையில் நிகழும் ஒன்று. தேன்சிட்டு ஒரு கருவி அவ்வளவே. ஆனால் இடைத் தரகின் ஒரு தேவையை,
//அது
காம்பிலேயே கைவிடப்பட்ட
பறித்துச் சூடப்படாத
மாற்று மல்லிகை//
என்னும் அடிகள் நெறிப்படுத்துவதாக எண்ணுகிறேன்.
//பிஞ்சுக்கும் சிட்டுக்கும்
இருக்கவில்லை
பிறகெந்த உறவும்!//
என்பது அப்படித்தான் நேராகிறது.
மறுத்து, இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று நிலையாமை அச்சத்தால் வனைந்துகொண்டவை மனித உறவுகள்.
வேலு.ஜி, எஸ்.கே, கொல்லான் நன்றி !
ReplyDeleteஅண்ணாச்சிக்குள் உறங்கும் கவிதை விமர்சகர் ஒட்டுமொத்தத்தையும் ஊடுருவிப் பார்க்கும் அழகே அழகு !
அவரவருக்கான வேலை(கடமை) முடித்தல் என்பது இது தானா கவிஞரே
ReplyDeleteநல்ல இருக்கு
புரிந்துகொள்ள முடிகிறது
ReplyDeleteசொல்லத் தெரியவில்லை.
த. ஜெய்குமார்