சில நாள்களாக கோவை மலைமுடிப் பகுதிகளில் கேரளத் தென்மேற்குப் பருவமழையின் சாரல்மழை தூவியது. அதனால் நொய்யல் நதியில் சிறுநீர்ப்பெருக்கு வழிந்தது. அதில் இறங்கிக் கால்நனைக்கும் வாய்ப்பு இன்றெனக்கு ஏற்பட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை என்ற தொடர்தான் எத்துணை உண்மை ! நன்னீர் பெருக்கும் நதிக்கு என்றும் உண்டோ நிரந்தரப் புனிதம் !
பாதங்களைத் தழுவும்
பவித்ரம் !
பருகுவதற்கு இனிவரும்
பறவைக்கூட்டம் !
ஊரெல்லாம் உறங்கியது
உற்பத்தித் தொழிற்சாலை !
உற்பத்தியைத் தொடங்கியது
கூழாங்கல் தொழிற்சாலை !
நீர்த்தாவரத்தின் வேர்களே !
உமது நிழலில்
உறங்கட்டும்
ஒருகோடி மீன்கள் !
மரகதங்களே
உங்களை உரமேற்றிக்கொள்க !
நீருக்கு எடுப்பிக்கலாம் அணை
ஆனால், என் மக்களே !
காலம்
யாராலும் கட்டமுடியாத கருங்குதிரை !
கூழாங்கல் தொழிற்சாலை மிக ரசித்தேன்....
ReplyDeleteஅழகான வர்ணனை..
ReplyDeleteகாலச் சக்கரத்தின் சுற்றலில் மீண்டும் ஒரு முறை நதியில் நீரோட்டம்...
ReplyDeleteபடங்களில் தெரியும் உற்சாகம் கவிதையிலும் தோன்றுகிறது...
சிறுநீர்ப்பெருக்கு//
ReplyDeleteஊரெல்லாம் உறங்கியது
உற்பத்தித் தொழிற்சாலை !
உற்பத்தியைத் தொடங்கியது
கூழாங்கல் தொழிற்சாலை !//
பச்சை நீர்ப்புரள்வில்
மரகதங்களே
உங்களை உரமேற்றிக்கொள்க !//
ரசனையானவை.