Friday, July 15, 2011

நீதி


இப்பொழுது

ஒருவர் வருவார்


விசாரிப்பார்

நடந்தது என்ன என்று


நாம் விவரிப்போம்

உடைகுரல் இடைமறிக்க

ஒவ்வொன்றாக


அவர் குறுக்கிட்டுக் கேட்பார்

அவரது ஐயங்கள் பெருகிக்கொண்டே போகும்

நாமும் தளராது

ஒருவரை மீறி ஒருவராகப் பகர்வோம்


அவர் நம்மைச் செவிமடுக்க வந்தவரா

அல்லது

நம்மைத் தம் கேள்வியால் ஒடுக்க வந்தவரா

நாமறியோம்


அவர் நம் இரட்சகரா

அல்லது

நம் நிலைகண்டு உள்மகிழ வந்த ரசிகரா

நாமறியோம்


நம்மை ஒரு பொருளாகக் கருதி

நாடிவரும் எவரிடமும்

நாம் நம்மை ஒப்படைத்துவிடுகிறோம்


வந்த வேலையை முடித்து

அவர் திரும்புகிறார்


நாம் காத்திருக்கிறோம்

அவர் பெற்றுத்தரும் தீர்ப்புக்காக

அல்லது

இன்னொருவருக்காக !

4 comments:

  1. மிக நன்றாக வந்திருக்கிறது.

    ReplyDelete
  2. நீதிமான்களுக்கு மட்டுமல்ல புரோஹித, ஆனந்தா ஆசாமிகளுக்கும் ஏன் இடைத்தரகர்கள் அனைவருக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  3. நம்மை ஒரு பொருளாகக் கருதி

    நாடிவரும் எவரிடமும்

    நாம் நம்மை ஒப்படைத்துவிடுகிறோம்//
    :-(

    ReplyDelete