நான் ஏங்கியிருப்பது உன் தோள்களில் தூங்குவதற்கே ! அவ்வண்ணம் தூங்குங்கால் என் ஜீவன் நீங்குவதற்கே !
கட்டியணைத்திருக்கும் உன் கைகளில் என் காதலின் மகரந்தங்கள் ஒட்டியிருக்கின்றன அவை உதிராமல் இருக்கவேண்டும் என்றே நான் உன்னோடு இருக்கிறேன்
இன்னும் இன்னும் நெருங்கிக்கொண்டேயிருக்கிறோம் இந்த நெருக்கத்தால் நம் உடல் வெப்பம் ஒன்றாகட்டும் நம் இதயத் தட்பம் ஒன்றாகட்டும்
எனக்குத் தெரியும் நம் நெருக்கம் இறுதியில் நெகிழும் அந்த நெகிழ்வால் நம்முள் சில மொக்குகள் அவிழும் அந்த அவிழ்வு காற்றில் சுகந்தத்தைத் தூவும் அதன் முடிவு ஒரு முத்தமாகக் கூட இருக்கலாம்
இந்தக் குட்டிகள் வரவர கண்களில் ஒற்றிக்கொள்ளும் பாவனைகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மேலைநாடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் கலை, அவற்றுடனான உரையாடல் ஆகியவை மிக முக்கியமான பேசுபொருள். அந்த அடிப்படையிலேயே இவற்றை அடிக்கடி பதிந்துவருகிறேன். நண்பர்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அருமை கவிஞரே.....
ReplyDeleteரொம்ப நல்லா இருக்குங்க..
ReplyDeleteஅண்ணே, மென்மை கலந்த காதல்... நல்ல இருக்கு..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகவிஞரே,
ReplyDeleteகாதல் உணர்வென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. எல்லா உயிரினங்களுக்கும் உண்டென்பது படத்தோடு பார்த்தபோது விளங்கிற்று.
//அதன் முடிவு
ReplyDeleteஒரு முத்தமாகக் கூட இருக்கலாம்//
இப்படியான முடிவை எதிர்பார்க்கவில்லை
இனிமையான முடிவு இளமையான கவிதை
கலாநேசன், கமலேஷ், வினோ, கொல்லான், கண்ணன் ! நன்றிகள்.
ReplyDeleteஇந்தக் குட்டிகள் வரவர கண்களில் ஒற்றிக்கொள்ளும் பாவனைகளை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. மேலைநாடுகளில் செல்லப் பிராணிகளை வளர்க்கும் கலை, அவற்றுடனான உரையாடல் ஆகியவை மிக முக்கியமான பேசுபொருள். அந்த அடிப்படையிலேயே இவற்றை அடிக்கடி பதிந்துவருகிறேன். நண்பர்கள் உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.