Saturday, September 11, 2010

பால்காரன் பாட்டு


என்னைக் கண்டதும்

முகந்திருப்பிக் கொள்கிறாயே

என்ன கோபமா ?


உன் மடி தேடி வந்தவனை

ஏமாற்றலாமா ?


நீ மட்டும் இல்லையெனில்

இவ்வுலகில்

எனக்கேது வாழ்வு ?


வரும் தை மாதம்

உன் கழுத்தில்

புதுமை பொலியும் கயிறொன்றைக்

கட்டத்தான் போகிறேன்

இது சத்தியம் !


நீ போகுமிடமெல்லாம்

உன்னைப் பின் தொடர்ந்து வரவே

பிரியப்படுபவன்

நானில்லையா ?


துயிலெழுந்ததும்

நான் முதலில் விழிக்கும் முகம்

உனதில்லையா ?


அமைதியாக நீ நின்றால்

ஆறு படி கறந்துகொண்டு

அகன்றுவிட மாட்டேனா !

5 comments:

  1. யாரை ஐயா சொல்கிறீர்?

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க.....ராமராஜன் பாட்டு

    ReplyDelete
  3. எளிமையாய் இருக்கு அண்ணே....

    ReplyDelete
  4. ரொம்பவும் கெட்டிக்காரத்தனமாகக் கவிதை எழுதி எழுதி எனக்கும் கொஞ்சம் அலுப்பாக இருக்காதா ? அதுதான் இப்படி. என் பழைய நோட்டில் 93-ஆம் வருடம் எழுதப்பட்டது.

    இந்தக் கவிதையை இப்படிப் பிரசுரிக்கக் கூடாது. தலைப்பையும் படத்தையும் நீக்கிப் படிக்கக் கொடுத்திருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. என் பார்வையில் இந்த கவிதை :
    பெண்ணை கறவை மாடாக என்னும் மனித உருவில் உள்ள மாக்களுக்கு எழுதப்பட்டது போல் உள்ளது
    சரிதானே கவிஞரே

    ReplyDelete