இன்னும்
கடவுளை நம்பும் உங்களை நினைத்தால்
பரிதாபமாக இருக்கிறது
இன்னும்
விடியலை நம்பும் உங்களை நினைத்தால்
வெட்கமாக இருக்கிறது
இன்னும்
கண்ணீர் மல்கப் பிரார்த்திக்கும் உங்களை நினைத்தால்
பதற்றமாக இருக்கிறது
இன்னும்
எதிர்காலத்தில் பற்று வைத்திருக்கும் உங்களை நினைத்தால்
பாவமாக இருக்கிறது
இன்னும்
காதலிக்கும் உங்களை நினைத்தால்
சிரிப்பாக இருக்கிறது
இன்னும்
திருமணம் நிச்சயிக்கும் உங்களை நினைத்தால்
விநோதமாக இருக்கிறது
இன்னும்
பிள்ளை பெற்றுப் பெயர் வைக்கும் உங்களை நினைத்தால்
குழப்பமாக இருக்கிறது
இன்னும்
எப்படியாவது வாழத் துடிக்கும் உங்களை நினைத்தால்
பயமாக இருக்கிறது
"இன்னும்
ReplyDeleteஎப்படியாவது வாழத் துடிக்கும் உங்களை நினைத்தால்
பயமாக இருக்கிறது"
இன்னும்
எப்படியாவது வாழத் துடிக்கும் உங்களை நினைத்தால்
வருத்தமாக இருக்கிறது
என்று மாற்றுங்கள் கடவுளை நினைத்தவர்களை
விநோதமாக பார்க்கும் நீங்கள் சாதாரர்களை பார்த்து
பயம் கொள்ளக் கூடாது! நண்பா !
நண்பரே, ஆலோசனைக்கு நன்றி !
ReplyDeleteகீழ்க்காணும் ஒழுங்குவரிசையை நோக்கவும்.
பரிதாபம்-வெட்கம்-பதற்றம்-பாவம்-ஏளனம்-விநோதம்-குழப்பம்-பயம் !
சரியாக இருக்கிறதா ?
அண்ணே, இவை அனைத்தும் இருந்தும், எதுவும் மாறப் போவதில்லையே...
ReplyDeleteஇன்னும் இன்னும்
ReplyDeleteசொல்லிக்கொண்டே இருக்கபோகிறோம்
கவிஞரே இப்படியாக