Monday, October 3, 2011

திரு. மாடசாமி துரையூருக்குப் பயணமாகிறார்

(இந்தக் கவிதை 1997-இல் ஆனந்த விகடனில் வெளிவந்தது. இக்கவிதை வெளியான சந்தர்ப்பத்தில் விமர்சகர்களாலும் எளிய வாசகராலும் அதிகம் எடுத்தாளப்பட்டுப் பேசப்பட்டது. அப்போது V-Four Exports என்கிற நிறுவனத்தில் பணியாற்றிய என் நண்பன் ஜெகன் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை என்னைத் தொலைபேசியில் பிடித்து ‘சார்... ரொம்ப டென்சனாயிருக்கேன். அந்தத் துரையூர்ப் பயணம் கவிதையைக் கொஞ்சம் சொல்லுங்க... ப்ளீஸ்’ என்று கெஞ்சுவான். நானும் உரிய ஏற்ற இறக்கங்களோடு சொல்வேன். நான் சொல்லும்போது தொலைபேசியை ஸ்பீக்கரில் வைத்துவிடுவான். கவிதையைக் கேட்டுப் பனியன் நிறுவனமே கெக்கே..பிக்கே என்று சிரிப்பதை நான் கேட்க வைப்பான்.

அவனுக்குச் சொல்லிச் சொல்லியே இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் இக்கவிதை என் நினைவுத் தகட்டில் பசுமையாய் அமர்ந்துவிட்டது. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெகன் இப்பொழுது எங்கிருக்கிறான் எனத் தெரியவில்லை. ஒருவேளை அவனையும் திருப்பூர் திருப்பி அனுப்பியிருக்கக் கூடும். மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் அதன் உதவி இயக்குநரை இந்தக் கவிதையின் பாதிப்பால் தனக்குக் கோபம் பொங்கிய தருணமொன்றில் ‘சார். கொஞ்சம் மூடீட்டு இருக்கீங்களா..?’ என்று காய்ந்துவிட்டான். அதற்காக அந்த அலுவலகத்திற்குள் அவன் நுழையாமல் பார்த்துக்கொள்ளும்படி அவனுடைய முதலாளியை அந்த அலுவலகம் கேட்டுக்கொண்டது.

என்னுடைய ‘அண்மை’ என்னும் கவிதைத் தொகுப்பில் இக்கவிதை இடம்பெற்றிருக்கிறது. அத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய கவிஞர். ஞானக்கூத்தன் தன் உரை முழுக்கவே இக்கவிதையைப் பற்றியே பேசியிருந்தார். )

தொரையூருக்கு எம்புட்டு ?

தொண்ணூறு பைசா டிக்கெட்டு.


ஒத்த ரூவா வாங்கீட்டு

டிக்கெட்டு குடுத்தான் கண்ரைட்டு.


பேசாம போய்ட்டான் அங்கிட்டு.


திரும்பி வந்து கண்ரைட்டு

சில்லறைப் பாக்கி தருவான்ட்டு

நானும் இருந்தேன் கம்முன்ட்டு.


வரவேயில்ல இங்கிட்டு.

என்றா எழவாப் போச்சுன்ட்டு

கோவம் வந்துது எகிறீட்டு.


கழுத்துல துண்டப் போட்டு

‘எடுறா பத்துப் பைசான்ட்டு

கேக்கலாம்னுருந்தேன் கறுவீட்டு.


ஆனா அதுக்குள்ள முந்தீட்டு

தொரையூர் ஸ்டாப்பிங் வந்திட்டு.


சட்னா எறங்க்யா... எறங்குன்ட்டு

கத்துனாம் பாரு கண்ரைட்டு.


எறங்கிக்கிட்டேன் மூடீட்டு.

11 comments:

 1. dear mr magudeswaran i too know jagan by that time, b'coz i've done some jobwork with jagan, but i don't have contact with jagan thereafter. if you come to know any of jagan's contact please mail me to akcmohan33@gmail.com thanks

  ReplyDelete
 2. sir, vaazhththukkal.vaazhndhu kettavarkal pls. arasu.

  ReplyDelete
 3. வணக்கம் திரு.மகுடேசுவரன்,

  அன்றையச் சூழலுக்கு இக்கவிதைக்கு பாரத அரசின் மிக உயரிய விருதே கொடுத்திருக்க வேண்டும். ஏனெனில், “சில்லரை”யை லவட்டும் சூத்திரத்தை அப்போது தான் கண்டு பிடித்து வெற்றிகரமாக செயல்படுத்தத் தொடங்கினார்கள்.

  இன்றும்தான் தொடர்கிறது அந்த(பிச்சை பிடுங்கும்) அவலம். ஆனால் என்ன? நமக்கெல்லாம் பழகிப்போய் விட்டது. பொத்திக் கொண்டு வந்து விடுகிறோம்.

  ReplyDelete
 4. திரு. அரசு ! நன்றி. வலியின் ஒலி

  திரு. சத்ரியன் ! ஆம். உலகில் தீமைகளும் தீயவர்களும் பல்கிப் பெருகுவதற்குக் காரணம், நல்லவர்கள் அதற்கு எதிராக எதுவுமே செய்யாமல் பொத்திக்கொண்டு போவதுதான்.

  ReplyDelete
 5. சிரிப்போடு சுரண்டல் வேதனையை உணரத்தரும் கவிதை.

  உங்களது 'பேசாமல் நாமும் பெண்ணாக...' கவிதைக்கு, Buzz-இல், தாய்க்குலங்கள் வீடுகட்டியது தெரியுமோ? அவர்களுக்கு 'திரு.மாடசாமி...' கவிதையை வாசிக்கப் பரிந்துரைத்திருந்தார் ஓர் அன்பர்.

  ReplyDelete
 6. அண்ணாச்சி ! வாழ்க தாய்க்குலங்கள் !

  ReplyDelete
 7. என் செல்லுல இருக்குது இன்டர்நெட்டு
  என்னமோ தோனுச்சு இன்னிக்குன்னுட்டு

  சரி உங்க பிளாக்க படிக்கலாம்னுட்டு
  பார்த்தா புதுசா ஒரு பதிவு இருந்துட்டு

  ஒரே மூச்சுல படுச்சுட்டு
  திரும்பவும் படுச்சேன் ரிப்பீட்டு

  தனியா நா மட்டும் உக்காந்துட்டு
  வந்துச்சு சிரிப்பு பொத்துகிட்டு

  பாக்கறவன் நெனைச்சுருப்பான் லூசுன்னுட்டு!

  ReplyDelete
 8. சந்தம் பொருந்த அமைத்திட்டு
  சபையில் கட்டு புதுமெட்டு

  மரபில் புலமை பெற்றிட்டு
  மணியாய்ச் செய்க புதுப்பாட்டு

  சிரிப்பு என்னும் மருந்திட்டு
  சிலரைக் கவர்ந்தேன் பதிவிட்டு

  முயன்றால் முடியும் தமிழ்ப்பாட்டு
  முயற்சிக்கென்றன் பாராட்டு !

  ReplyDelete
 9. கவிஞரே! வாழ்த்திற்க்கு நன்றி. நான் போட்டுக்கொள்ளும் சூடு ஒருபோதும் புலியின் 'வரி'களாகா!.
  திரைமொழியை வளர்த்துர்க்கொள்வதே எந்தன் தலையாய நோக்கம். என் காட்டிற்க்கு உங்களை அழைத்துச் செல்வேன்.

  ReplyDelete
 10. //எறங்கிக்கிட்டேன் மூடீட்டு.//

  நச்..ச்ச்ச்ச்ச்ச்ச்!

  ReplyDelete