ஹளபேடு
உளிகள்
இருநூறாண்டுகள் ஓயாது ஒலித்தனவாம் !
அவற்றால் செதுக்கத் தொடங்கிய
சிற்பங்களை முடிக்க முடியவில்லை !
இதிகாசங்களின் அதிமதுரக் காட்சிகள்
கண்களைக் கொய்கின்றன.
கற்களே பூக்களாகும் கனவுக் கோலம்
யாராலும் நெருங்கவியலாத அற்புத வித்தகம்
ஹொய்சால மன்னர்களின் கலைக் களிநடனம் !
சிலைக்குள் சென்றுவிட்ட சிந்தையை
உயிர்ச்சிலையொன்று கலைத்து
என் காலருகே நின்றது.
அது கூட்டத்தில் அம்மையைத் தொலைத்துவிட்டிருந்தது.
கலையையும் உயிரையும் பிரித்தறியாப் பேதையாகிக்
கடவுளின் அருகில்
தெய்வப் பதுமையின் காவலனாக
நெடுநேரம் நின்றேன்.
எனக்குக் கன்னடம் தெரியவில்லை
குழந்தைக்கு ஒன்றும் தெரியவில்லை.
ஓங்கிக் குரலெடுத்து அழுதுவிடாதிருக்க
அதன் விரல்களைப் பிடித்து விளையாடினேன்.
அம்மையை மறந்த அழகு பொம்மை
என்னுடன் விழிகளால் மனதால் ஒன்றியது.
இறுதியில் அதன் தாய் தேடிவந்துவிட்டாள்.
பாப்பாவைத் தூக்கி முத்தமிட்டாள்.
பாப்பா
தாயின் இடுப்பில் அமர்ந்துகொண்டாள்
என்னைப் பார்வையால் முத்தி எடுத்தபடி !
நாங்கள் பிரிந்தோம்.
இன்பமும் துயரமுமான
பெயரிடமுடியாத பெரும் பிரிவு அது !
Beautiful எல்லாமே!
ReplyDeleteநல்லாருக்கு...
ReplyDelete//இன்பமும் துயரமுமான
ReplyDeleteபெயரிடமுடியாத பெரும் பிரிவு அது//
உண்மைதான்.
நல்லா இருக்குங்க.
ReplyDeleteஆ! சூப்பர்!
ReplyDeleteஅருமை சார்.. நெகிழ்வு..
ReplyDeleteநண்பர்களே...,
ReplyDeleteஇந்தக் கவிதை கர்நாடக மாநிலத்தில் ஹளபேடு என்கின்ற ஊரிலுள்ள சிற்பக் கோவிலில் எனக்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவம்.
மேலே உள்ளது என் கைப்பிடித்துக் காத்திருந்த அந்தக் குழந்தையின் புகைப்படம்தான் !
அனைவரின் பாராட்டுகளுக்கும் நன்றிகளும் மகிழ்வும் !
"கடவுளின் அருகில்
ReplyDeleteதெய்வப் பதுமையின் காவலனாக
நெடுநேரம் நின்றேன்"
தெய்வத்தின் சிறுதுளி உயிர்கொண்ட பதுமையென் எதிரே வந்து நிற்க .... ஆஹா... அற்புதம் அற்புதம்.
அன்புடன்
முத்துக்குமார்