தீவினை அச்சம்
தீங்கிழைப்போன் காடழிப்பான் நாடழிப்பான்
தீங்கிழைக்க அஞ்சுவோன்
மலர்கிள்ள மயங்குவான்
தீங்கெனும் கன்றுகளுக்கு நீருற்றினால்
வளர்ந்து மரமாகி
தீங்கெனும் எரிநிழல் பெய்யும்
எதிர்த்தடிக்க எண்ணாதிருந்து
கடந்துவிடும் அறிவு
தீமையின் நஞ்சுக்கு முறிமருந்து
அறியாமற் செய்த தீங்குக்கு
ஆற்றிநின்ற
இல்லாமையால் செய்த தீங்கு
பசிக்கு
முள்ளோடு தின்ற கள்ளிப் பழம்
கெடுதல்களால் கெடாதிருக்க
கெடுதல்களைக் கொடாதிரு !
சுடுகொள்ளி அகன்றால் சூடேது ?
எதிரியால் தீங்கு எள்ளளவு !
எதிர்மறைச் செயலால்
ஏற்பட்ட தீங்குக்கேது கொள்ளளவு ?
தீச்செயல் விளைவை
ஓடியொளிந்து காப்பதேது ?
வால்பற்றிய நெருப்பை வைக்கோல் போரில்
தேய்த்தணைக்க முயன்றதாம் குரங்கு !
தீங்கிழைக்கத் தெரியாதிருத்தல்
அடுத்துக் கெடுக்க அறியாதிருத்தல்
உன்னை ஓம்பும் உளப்பாங்கு
தீச்செயல் அறியான் நெஞ்சு
வண்ணத்துப் பூச்சி
வந்தமரும் பூங்கொடி
//மலர்கிள்ள மயங்குவான்//
ReplyDeleteமிகவும் ரசித்தேன். கவிதை அருமை.
நவீன வள்ளுவரே,
ReplyDeleteஉமது கருத்து அருமை.
தொடர்ந்து செல்க.
//கெடுதல்களால் கெடாதிருக்க
ReplyDeleteகெடுதல்களைக் கொடாதிரு
சுடுகொள்ளி அகன்றால் சூடேது//
தமிழின் அழகு,உங்கள் வரிகளில்..அருமை அண்ணா
கவிஞரே, ஒவ்வொரு கவியிலும் அருவியான அழகான தமிழ் மயக்கவைக்கிறது. அருமை
ReplyDeleteபசிக்கு
ReplyDeleteமுள்ளோடு
தின்ற
கள்ளிப்பழம்.
அற்புதம்.
நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி !
ReplyDelete