ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் மின் துண்டிப்பால் தலையைச் சொரிந்துகொண்டிருந்த பொழுதில் வீட்டிலுள்ள மற்ற ஆள்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று நோட்டமிட்டேன். எல்லாரும் நகராத காலத்தைப் பகலுறக்கத்தில் நகர்த்தியவண்ணம் இருந்தார்கள். வீட்டில் புதிதாக இரண்டு பூனைக்குட்டிகள் பிறந்து விளையாடும் பருவத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதை என் முந்தைய அஞ்சல்களைப் படித்தவர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். இனி அவர்களைக் காண்க !
ரெண்டாவது பூனை பெண் பூனையா இருக்கும். அதான் டெட்டி பியர் பொம்மையைக் கட்டிப் பிடிச்சுத் தூங்குது.
ReplyDeleteவணக்கம் நண்பரே,
ReplyDeleteநேற்று தான் பரிசல்காரன் மூலமாக உங்கள் தளத்துக்கு வந்தேன், சட்டென்று ஒரு பதினைந்து வருடம் பின்னோக்கி சென்று விட்டேன். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்தக கடையில் கணையாழி வாங்கி அங்கேயே ஒரு புரட்டு புரட்டியது, சுஜாதா உங்களைப்பற்றி சொன்னது, உங்களின் அந்த 'பூப்பெய்தா சிறுமி' என்று முடியும் கவிதையை நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது....
இதோ house of sleeping beauties இசையை கேட்டுக்கொண்டே உங்கள் பக்கத்தை திறந்தால்...
அனேகமாக உலகின் எல்லா அற்புதங்களும் இந்த அதிகாலை போல இயல்பாகத்தான் நடந்தேறி விடுகிறது...
இந்த இணையத்துக்கும் பரிசல்காரனுக்கும் நன்றிகள் பல...
பாலா-சிங்கப்பூர்