Tuesday, August 10, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே - 2

· காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக வீரர்கள் பயிற்சி செய்ய வெறும் 4 இலட்ச ரூபாய் விலை மதிப்புள்ள டிரெட் மில் சாதனங்களை 10 இலட்சத்துக்கு வாடகைக்கு எடுத்தார்களாமே... ?

இதைத்தான் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்றார்களோ !


· என்ன வகை செல்பேசி வைத்திருக்கிறீர்கள் ?

LG GX200. விலை மலிவு. மின்னேற்றம் வாரக்கணக்கில் தாங்குகிறது.

· ஜோதிடத்தின்மீது நம்பிக்கை வருகிறதா ?

வரூஊஊம். ஆனா வராது.

· பீகார் வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டார்களாமே கோவையில் இரண்டு வயதுக் குழந்தையிடம்...

அவர்களைப் பிடித்து கொரில்லா செல்லில் அடைக்கவேண்டும்.

· டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஜெயலலிதா ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளாரே...?

என்ன இருந்தாலும் அவர்கள் அம்மாவின் நியமனங்கள் அல்லவா...

· கார்கள் விற்பனை அதிகரித்திருக்கிறதாமே...?

கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் அதை விற்றுக்கொண்டிருக்கிறார்கள். அந்த விற்பனையையா சொல்கிறீர்கள் ?

· திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி விரைவில் தி.மு.க.வில் இணையப் போகிறாராமே ?

தோழர்களை சித்தாந்தங்கள்தாம் வழிநடத்த வேண்டும். வேறு சிந்தனைகள் அல்ல. அவிநாசி சாலையில் பழைய ஸ்கூட்டரில் நிதானமாகச் சென்றுகொண்டிருக்கும் அவரை அநேக முறை பெருமையோடு கடந்து சென்றிருக்கிறேன்.· பெண்கள் மட்டுமே வசிக்கும் தீவு ஒன்றுக்கு உங்களை அனுப்பி வைத்தால் என்ன செய்வீர்கள் ?

திரும்பி வரமாட்டேன்

· எந்திரன் அறிவியல் புனைகதை என்கிறார்கள். அதை நம் மக்கள் ஏற்பார்களா ?

அவர்கள் எடுத்திருப்பது எந்திரன் அல்ல. கால்குலேட்டட் ரிஸ்க்.

· பா... வை ஒருவரும் சேர்த்துக்கொள்ளாமல் தவிக்க விட்டு விட்டார்களே...?

பொதுத்தேர்தல் வரும்போது பாருங்கள் அவர்களுக்கு ஏற்படும் கிராக்கியை.

· ஊட்டிக்குப் போகவில்லையா ?

எதற்கு... டால்பின் நோஸிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்கா ?

· மும்பையில் கப்பல்கள் மோதிக்கொண்டதால் கடல் பாழாகிக் கொண்டிருக்கிறதாமே...?

கப்பல்கள் மோதிக்கொண்டதுதான் புதிய செய்தி. கடல் பாழாகிக் கொண்டிருப்பது பழைய செய்திதான்.

12 comments:

 1. / கப்பல்கள் மோதிக்கொண்டதுதான் புதிய செய்தி. கடல் பாழாகிக் கொண்டிருப்பது பழைய செய்திதான். /

  அண்ணே இது கலக்கல்...

  ReplyDelete
 2. தங்களின் பதில்கள் அருமை. அதிலும் கடைசி பதில்...
  கவிஞரே, விரைவில் எங்கள் கேள்விகளுக்கும் பதில் சொல்வீரா?

  ReplyDelete
 3. இடம்பெறாத கேள்வி : உங்களுடைய குசும்பை இன்னும் இளமையாகவே வைத்திருக்கிறீர்களே எப்படி?

  ReplyDelete
 4. வினோ... அதுதான் உண்மை.

  கொல்லான்... ஐடியா நன்றாக இருக்கிறது. நானும் இதைப் பற்றி யோசித்தேன். ஓபனிங் நல்லாதான் இருக்கும். பினிசிங் சரியா வருமா ?

  சு. சிவக்குமார்... நானும் உங்கள் எல்லாரைப் போல இளைஞன் தானுங்க. என்னை எப்போ ’பெரிசு’ ஆக்கினீங்க ?

  ReplyDelete
 5. //திரும்பி வரமாட்டேன்// - மன ஊறலும் மற்றும் தவிர்க்கவழியில்லாத முடிவும் போல்!

  //எதற்கு... டால்பின் நோஸிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்கா?// எத்தனை பேருக்குப் புரியவரும் இந்தப் பதில்? எனக்கானால் சிரிப்புத் தாளவில்லை.

  ReplyDelete
 6. கலைஞரின் கேள்ளி-பதில் போல் அல்லாமல் இது
  நன்றாக இருக்கிறது!!!

  ReplyDelete
 7. கவிஞரே, நீங்க ஆரம்பிச்சு வையுங்க. அதுபாட்டுக்கு அருமையான பினிசிங் குடுக்கும்.

  ReplyDelete
 8. ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

  சேலம் தேவா ! கலைஞரின் கேள்வி பதில்கள் அரசியல் காரணங்களுக்காக மலிவாக உணரப்படுகிறதே தவிர சில கேள்வி பதில்களில் அவரது அனுபவமும் ஆற்றலும் சாமர்த்தியமும் ஒன்றுகலந்து மின்னுவதும் உண்டு. உதாரணம் :-

  கேள்வி: திருமணத்திற்கு முன் உறவுகொள்வது சட்ட விரோதமானதில்லை என்று குஷ்புவின் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறதே...?

  கலைஞர் பதில்: சங்க காலத்தில் களவியல் ஒழுக்கம் என்பது உண்டு. இந்தப் பிரச்சனையை அந்தக் கோணத்தில் அணுகுவோரும் உளர்.

  கொல்லான்... முதலில் உங்கள் 12 கேள்விகளை எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். பலதுறை சார்ந்தும் நாட்டு நடப்பை ஒட்டியும் கூர்மையாகவும் பதில் கூறச் சவாலானதாகவும் முதிர்ச்சியாகவும் இருக்கும்படி கேள்விகளைக் கேட்கவும். மின்னஞ்சல்:
  kavimagudeswaran@gmail.com

  ReplyDelete
 9. அனுப்பி வைக்கின்றேன் கவிஞரே.

  ReplyDelete
 10. நல்லா இருக்கு நண்பரே . ரசிக்க வைக்கிறது . கேள்விகளும் . பதில்களும் . பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 11. // எதற்கு... டால்பின் நோஸிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்வதற்கா? //

  புரிந்தது. ’சென்ற’ அனுபவமா? :)

  ReplyDelete
 12. வெயிலான்...

  சென்றவரைக் கேட்டால்
  வந்துவிடு என்றார்
  வந்தவரைக் கேட்டால்
  சென்றுவிடு என்றார்

  ReplyDelete