Friday, August 20, 2010

கேள்வியும் நானே பதிலும் நானே 3

·         இலங்கைப் பந்து வீச்சாளர் ரந்தீவ் இந்தியாவிற்கெதிரான ஆட்டத்தில் வேண்டுமென்றே நோபால் போட்டதற்கு ஊடகங்கள் லபோ திபோ என்று அங்கலாய்க்கின்றனவே...

மக்கள் மீது குண்டு போட்டால் ஊடகங்கள் ஒருவேளை மௌனம் காத்திருக்கும். நோபால் போட்டால் விட்டுவிடுமா ?

·         சத்யம் ராஜூவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதே...

ஊரார் பணத்தை உருக்கி உள்ளுக்குத் தள்ளிக்கொண்டிருப்பவர் மத்தியில் உள்ளதை உருப்பெருக்கி ஊருக்குக் காட்டியவருக்கு ஜாமீன் கிடைக்க இத்தனை நாளானதுதான் ஆச்சரியம்.

·         தினத்தந்தி வெள்ளிக்கிழமை பேப்பரில் என்ன விஷேசம் ?

25 சினிமா விளம்பரங்கள் 12 ராசி பலன்கள்

·         நாநோ கார் வாங்கலாமா ?

நோநோ

·         காமன்வெல்த் போட்டித் தொடர்களுக்கு விளம்பரங்கள் குறைகின்றனவாமே...

அதுதான் பெரிய விளம்பரம் கிடைத்துவிட்டதே !

·         நான் மகான் அல்ல படம் பார்ப்பீர்களா ?

நான் மகான் இல்லை

·         சேலத்திற்கு முதலமைச்சர் இன்று வருகிறாராமே..!

அம்மா அடுத்து சேலத்தில் கால் வைப்பதற்குள் ஐயா முந்திக்கொண்டுவிட்டார்

·         பாராளுமன்றக் கட்டிடம் ஒழுகுகிறதாமே...!

கூரையோடு அடித்தளத்தையும் பழுது பார்க்கவேண்டிய கட்டிடம்

·         ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் 8000 பேர் வெளியேறவிருக்கிறார்களாமே...!

வந்த வேலை முடிஞ்சுபோச்சு. வாங்க போவோம்.

·         கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றார்களே...!

அந்த எண்ணிக்கை - வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்திருப்பதைத் தெரிவிக்கும் முதல் எச்சரிக்கை மணி

·         இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு மோசடி ஆசாமியிடம் நிலம் என்று ஏமாந்து கடல்பரப்பை விலைக்கு வாங்கியிருக்கிறதாமே...!

அப்படியானால் IOC கடனும் வாங்குகிறது கடலும் வாங்குகிறதா ?

·         திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்தால் தவறாமல் செல்லவேண்டுமா ?

நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகளில் அதுவும் ஒன்று. சரியான நேரத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி அங்கு உலவும் முகங்கள் ஒவ்வொன்றையும் படித்து வரவேண்டும்.

6 comments:

  1. / நான் மகான் அல்ல படம் பார்ப்பீர்களா ?

    நான் மகான் இல்லை /

    நல்ல இருக்கு அண்ணே...

    ReplyDelete
  2. பதில்கள் அருமை. ஊடகங்கள் நோபாலைப் பற்றித்தான் பேசும். போபாலை மறந்துவிடும்.

    ReplyDelete
  3. ரமேஷ் வைத்யா ! வாருங்கள் வரவேற்கிறேன்.

    வினோ, கலாநேசன் ! நன்றி.

    ReplyDelete
  4. //
    ஈராக்கிலிருந்து அமெரிக்கப் படையினர் 8000 பேர் வெளியேறவிருக்கிறார்களாமே...!

    வந்த வேலை முடிஞ்சுபோச்சு. வாங்க போவோம்.
    // அருமை :).

    ReplyDelete